Published on 05/10/2019 | Edited on 05/10/2019
ரஜினி இந்துத்துவாவை பின்பற்ற சொல்லவில்லை, இந்து கோவிலைதான் கும்பிட சொன்னார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
![karathe thiyagarajan](http://image.nakkheeran.in/cdn/farfuture/Gi8rYrMgkopIAKPj9FZgtIkfI2LbklGFyNaLCSYpoNo/1570250383/sites/default/files/inline-images/karathe-thiyagarajan.jpg)
சென்னை நங்கநல்லூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மரம் நடும் விழாவில் பங்கேற்ற கராத்தே தியாகராஜன் பேட்டியளித்துள்ளார்.
மேலும் பேசியவர், ரஜினியை பின்பற்றி வைகோவும் ஆன்மீக அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டார். அதனால்தான் மதிமுகவினர் பெரும்பாலும் இந்துக்கள், கோயில் கும்பாபிஷேகம் நடத்தினேன் என வைகோ கூறியுள்ளார்.