Skip to main content

“எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” - மீண்டும் வெடிக்கும் ராஜ்கிரண் மகள் விவகாரம்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

rajkiran step daughter issue

 

சினிமா நடிகர் ராஜ்கிரண் துறையூரைச் சேர்ந்த பத்மஜோதி என்கிற கதிஜாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பத்மஜோதியின் மகள் ஜனத்பிரியா வயது 38 இவர் சினிமா மற்றும் சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

இந்நிலையில், ‘ஜனத்பிரியா 17 பவுன் நகை மற்றும் குடும்ப தாலியை எடுத்துச் சென்று விட்டார் என்றும், அத்தோடு எனது கணவர் ராஜ்கிரண் மீது அவதூறு பரப்பி வருகின்றனர் என்றும் ஜனத்பிரியா அவரது கணவர் முனீஸ் ராஜா மற்றும் ஜனத் பிரியாவின் முதல் தந்தை இளங்கோவன் ஆகியோர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பத்மஜோதி புகார் அளித்துள்ளார். இந்த புகாரை முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பேரில் ஜனத்பிரியா மற்றும் முனீஸ் ராஜா இருவரையும் அழைத்து முசிறி டிஎஸ்பி யாஸ்மின் மற்றும் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் காவேரி ஆகியோர் DSP அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜனத்பிரியா மற்றும் முனீஸ் ராஜா இருவரும், "நாங்கள் தான் புகார் அளிக்க வேண்டும். எனக்கு எனது தந்தை மற்றும் பாட்டி அளித்த 40 பவுன் நகைகளை அவர்கள் வைத்துக்கொண்டு தரவில்லை. மேலும் எனக்கு 37 வயது வரை திருமணம் செய்து வைக்காமல், அவர்கள் வீட்டில் வேலைக்காரியாகத்தான் நடத்தினர். தற்போது நான் திருமணம் செய்து விட்டதால் அவர்களுக்குக் கஷ்டமாக உள்ளது. அதனால்தான் என் மீது புகார் அளித்துள்ளனர் என ஜனத்பிரியா தெரிவித்தார். மேலும் ராஜ்கிரண் நினைத்திருந்தால் இந்த புகார் வருவதைத் தவிர்த்திருக்கலாம். எங்களது நகைகளை எங்களுக்குக் கொடுத்து விட்டு எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்றார்.

 

பத்மஜோதி மாலை 5 மணிக்கு வருகிறார்; நீங்களும் மாலை ஐந்து மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஜனத்பிரியாவிடம் போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். இச்சம்பவம் முசிறி டிஎஸ்பி அலுவலகப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்