Published on 24/02/2021 | Edited on 24/02/2021
![xமந](http://image.nakkheeran.in/cdn/farfuture/fTSkeV1KbT0bifK-2YncUJ0q6gZfHqD5dcnLYfKj2rQ/1614172571/sites/default/files/inline-images/34_37.jpg)
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நாளை மறுநாள் செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் பங்கேற்கப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் எதைப்பற்றி பேச இருக்கிறார், அரசியல் தொடர்பாக மீண்டும் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.