Skip to main content

மக்கள் இயக்கமாக மாற்றி கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்ள வேண்டும்

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் கரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது.  சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன் தலைமை தாங்கினார்.  நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா முன்னிலை வகித்தார். காவல்துறை டிஎஸ்பி ஜவகர்லால் சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தமிழரசன், அண்ணாமலை பல்கலைக்கழக நுண் உயிரியல் பேராசிரியர் குணசேகரன் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம், சிதம்பரம் நகராட்சி பொறியாளர் மகாதேவன் உள்ளிட்டகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

 To become a people's movement and protect against coronavirus


அப்போது பேசிய சார் ஆட்சியர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் அதிகாரிகளும் சமூக நல பொது அமைப்பினரும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். தொற்று நோய் அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே முக கவசம் அணிந்தால் போதுமானது. அனைவரும் அணிய தேவையில்லை.  வெளியிலிருந்து வருபவர்கள் வீட்டுக்குச் செல்லும்போது வீட்டிலிருந்து வெளியே வரும்போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.  தங்கும் விடுதிகளில் தற்போது தங்கியுள்ள ஏற்கனவே தங்கியிருந்த வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை உரிமையாளர்கள் ஒப்படைக்கவேண்டும்.

திருமண மண்டபங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தவிர புதிதாக எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிக்கக்கூடாது. ஒவ்வொரு அதிகாரிகளும் தங்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு பற்றிய விவரங்களை எடுத்துக் கூறவேண்டும்.  கோயில், மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் முடிந்தவரை ஒரே நுழைவாயிலாக வைத்து அதன் வழியாக வரும் பொதுமக்களை பரிசோதனை செய்து அனுப்பவேண்டும்.  நோய்தொற்று அறிகுறிகளுடன் பொதுமக்கள் எவரேனும் மருந்தகங்களுக்கு சென்று மருந்து கேட்டால் மாத்திரைகளை மருத்துவர்கள் அனுமதியின்றி வழங்கக்கூடாது என பேசினார்.  ஆணையர் சுரேந்தர் சார் பேசுகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதார பணிகளையும் தூய்மை மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அரசு அலுவலகம் மற்றும் கடை வாசல்களில் பொதுமக்கள் கை கழுவுவதற்கான ஏற்பாடுகளை செய்து வைக்க வேண்டும் மக்களின் ஒத்துழைப்போடு இதை மக்கள் இயக்கமாக மாற்றி நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்