Published on 05/07/2019 | Edited on 05/07/2019
அடுத்த 24 மணிநேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, திருநெல்வேலி, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை, அதிகபட்சமாக வால்பாறையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் இருக்குமென்றும், அதிகபட்சம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இருக்கும் என்றும், நகரத்தின் சில பகுதிகளில் மாலை நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.