Published on 30/10/2018 | Edited on 30/10/2018

சென்னையில் இன்று காலையில் பல இடங்களில் மழை பொழிவு காணப்பட்டது.
வடகிழக்கு பருவமழையின் அறிகுறியாக சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை மழை பொழிந்தது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதியில் மழை பொழிவு இருந்தது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் புழல், செங்குன்றம் ஏரி, சோழவரம் ஆகிய இடங்களில் லேசான மழை பொழிந்தது.
தரமணி, பெசன்ட் நகர், திருவான்மியூர், குரோம்பேட்டை, வேளச்சேரி, திருவல்லிக்கேணியிலும் மழைப்பொழிவு இருந்தது.