தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தென்கிழக்கு, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும். இது மத்திய கிழக்கு, அதை ஒட்டிய அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறக்கூடும். இது மத்திய அரபிக்கடலில் அக்டோபர் 21 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.