Published on 29/11/2018 | Edited on 29/11/2018
![](http://image.nakkheeran.in/cdn/farfuture/M4c6NJWjjrrzJMNv54fyVfmVaNbloxnuymGZ4Ezx-zE/1540048382/sites/default/files/inline-images/rain_3.jpg)
கஜா புயலும், அதைத்தொடர்ந்த மழையும் இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் தமிழ்நாட்டில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் டெல்டா உட்பட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.