Skip to main content

பாஜக ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு!!

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

வேலூர் மாநகரில் புதிய பேருந்து நிலையம் அருகே தனி நபருக்கு சொந்தமான காலியிடம் 2.7 ஏக்கர் இருந்தது. இதனை வேலூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரிகளான ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டனர். அதனை விற்க பெரும் புள்ளிகளிடம் பேரம் பேசினர். அதனை ஆந்திராவை சேர்ந்த திருமலாபால் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்தவர் பெயரில் அமைச்சர் வீரமணி வாங்க முயன்றார் எனக்கூறப்படுகிறது.

 

 raid at  BJP's supporter home

 

அதில் பிரச்சனை ஏற்பட ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ்சை அமைச்சர் தனது அதிகாரத்தை வைத்து மிரட்டினார் எனக்கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் நான் அந்த நில விவகாரத்தில் ஈடுப்படவில்லையென கடந்த பிப்ரவரி 18ந்தேதி நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்தார்.

 

 raid at  BJP's supporter home

 

இந்நிலையில் இன்று பிப்ரவரி 21ந்தேதி காலை முதல் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், சமீபத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட, வீரமணியின் பினாமியான சொந்தில்குமார் வீடுகளில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிடதக்கது, ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் இருவரும் பாஜக ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடதக்கது. அவர்களது உறவினர்களும் பாஜகவில் உள்ளனர்.

சார்ந்த செய்திகள்