Skip to main content

சிவகங்கை மண்ணிற்கு சாகித்ய அகாதமி!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019


  

   சாகித்ய அகாதமி விருது வரிசையில், குழந்தைகள் இலக்கியத்தில் பங்களித்தமைக்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவருக்கு இந்தாண்டிற்கான சாகித்ய அகாதமியின் பாலபுரஸ்கார் விருது கிடைத்துள்ளதால் மாவட்டத்திலுள்ள இலக்கிய வட்டாரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 

d

 
      வருடந்தோறும் இலக்கியத்தில் சிறந்தப் படைப்புக்களை தந்த படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசால் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுவது வழக்கம். இதில் இந்தாண்டிற்கான விருது வரிசையில் குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புக்களை தந்த தேவி நாச்சியப்பனுக்கு சாகித்ய அகாதமியின் பாலபுரஸ்கார் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 

 

d

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் வசித்து வரும் தேவி நாச்சியப்பன் கீழச்சீவல்பட்டி எஸ்.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரிசையையாக பணியாற்றியதோடு மட்டுமில்லாமல் பந்துவும் பாப்பாவும், புத்தகத் திருவிழா மற்றும் பசுமைப்படை உள்ளிட்ட நூல்களை இயற்றி சிறார் இலக்கியத்தியத்தை மேம்பட வைத்தவர். 

 

d

 

மறைந்த குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் மகளான இவர், " நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்" எனும் புத்தகத்தையும் திறம்பட தொகுத்து இலக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. அது போக, காரைக்குடி கவிமணி குழந்தைகள் சங்கத்தின் அமைப்பாளராக இருந்து குழந்தைகளுக்கான இலக்கியத்தியத் திறனை ஊக்குவிக்க, தற்பொழுது இவருக்கு இந்தாண்டிற்கான சாகித்ய அகாதமியின் பாலபுரஸ்கார் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்விருதால் சிவகங்கை மாவட்ட இலக்கிய வட்டாரமே விழாக்கோலம் பூண்டிருக்கின்றது என்றால் அது மிகையல்ல.!


 

சார்ந்த செய்திகள்