Published on 15/12/2018 | Edited on 15/12/2018

ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்கிறார்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா? என ராகுல் காந்தியை கேட்டபொழுது முதலில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ராகுல் வருவாரா என்பது சந்தேகமாகவே இருந்தது.
ராகுலுக்கும் ஸ்டாலினுக்கும் ஏதோ முரண்பாடு இருப்பதாக செய்திகள் ஊதி பெரிதாக்கப்பட்டன. ஆனால் கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியாவுடன் ராகுல் பங்கேற்கிறார். ஐந்து மாநில தேர்தல் வெற்றி கொடுத்த மகிழ்ச்சியில் முக்கிய தோழமைக் கட்சியான திமுகவின் விழாவில் சம்பிரதாயங்களை தாண்டி ராகுல் ஆர்வம்காட்டி கலந்து கொள்கிறார்.