Skip to main content

ராகுல் காந்தி கைது... சென்னையில் ஆர்ப்பாட்டம்... (படங்கள்)

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பூதாகரமாகி வரும் சூழலில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று நேரில் செல்வதாக அறிவித்தனர்.

 

அதன்படி, அவர்கள் தங்களது வாகனத்தில் ஹத்ராஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது போலீஸார் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் 'யமுனா' எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக நடந்தே செல்வதாக முடிவெடுத்து தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், நடந்து செல்லும் ராகுல் காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்த முற்பட்டதோடு, அவரை தாக்கியதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ராகுல்காந்தியை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். அரசு உத்தரவை மீறியதற்காக ஐ.பி.சி.யின் 188 சட்டப்பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற ராகுல்காந்தியை கைது செய்த உத்திரபிரதேச அரசைக் கண்டித்து இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை எரித்து கோஷமிட்ட கட்சியினர் சாலை மறியல் செய்யவும் முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்