Published on 12/01/2019 | Edited on 12/01/2019

தமிழகத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இதுவரை 30 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள அரசின் இடையூறுகளை சமாளித்து நீர் சேமித்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் பாராட்டு. கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக இருமுறை அணை 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.