தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புத்தாடைகள், பட்டாசுகள் தான். அந்த வகையில் ஏழை மக்களுக்கு உதவும் விதமாக ஒரு ரூபாய்க்கு சட்டையும், 10 ரூபாய்க்கு நைட்டியும் விற்பனை செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த ஒருவர்.
![low price clothes for poor people](http://image.nakkheeran.in/cdn/farfuture/fWvWjgPsVdESQ_UYEsHgj58HQturaDQwRNAqEdW1Ezo/1572077017/sites/default/files/inline-images/dress_0.jpg)
சென்னையை சேர்ந்த ஆனந்த் என்பவர் வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர், தீபாவளியை முன்னிட்டு கடந்த 19-ந்தேதி முதல் தினமும் காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி நேரத்துக்கு 1 ரூபாய்க்கு சட்டை, 10 ரூபாய்க்கு ‘நைட்டி’ விற்பனை செய்து வருகிறார். தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு ஆடைகள் வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. ஏழை மக்கள் மகிழ்ச்சிக்காக இவ்வாறான ஒரு திட்டத்தை கடை உரிமையாளர் நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்காக இவ்வாறான குறைந்த விலையில் ஆடைகளை விற்பனை செய்வது பலரையும் நெகிழ வைத்துள்ளது.