Skip to main content

பஞ்சாப் நேசனல் வங்கியில் 13.75 கிலோ நகை காணவில்லை என அதிகாரி புகார்! திருடியது இறந்த மாரிமுத்து மட்டும் தானா? 

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

புதுக்கோட்டை பஞ்சாப் நேசனல் வங்கி அலுவலக உதவியாளர் திருக்கட்டளை  மாரிமுத்து கடந்த மாதம் 29 ந் தேதி காணாமல் போன நிலையில் திருவரங்குளம் வளநாடு தைலமரக்காட்டில் அவரது கார் எரிந்து கிடந்தது. காருக்குள் சில கவரிங் வளையல்களும் வேறு சில பொருட்களும் எரிந்து கிடந்த நிலையில் ஒருபக்கம் போலிசார் 3 தனிப்படைகள் அமைத்து  மாரிமுத்துவை தேடினார்கள். மறு பக்கம் வங்கி அதிகாரிகள் நகைகளை காணவில்லை என்று 5 நாட்களாக ஆய்வு நடத்தினார்கள். 

 

ம்


இந்த நிலையில் நேற்று மணமேல்குடி கோடியக்கரையில் மாரிமுத்து சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. சட்டை மற்றும் டைலர் சிம்பள் வைத்து மாரிமுத்துவிடம் தான் அந்த சட்டை இருந்ததாக சொன்னார் அவர் மனைவி ராணி. அதனால் அழுகிய சடலமாக கிடந்தது மாரிமுத்து தான் என்று அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்தனர்.
  

ப்

 

நகைகளை காணவில்லை என்று வாய்மொழியாக சொல்லி வந்த வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களிடம் நகையை காணும் பணம் வாங்கிக்கலாம் என்று பதில் சொனனார்கள்.


   மாரிமுத்து காணாமல் போய் 5 நாட்கள் கடந்தும் ஏன் வங்கி நிர்வாகம் புகார் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் பலரது தரப்பிலும் எழுந்தது. அதனால் வங்கியில் முக்கிய பொருப்பில் உள்ளவர்களை தப்பிக்க வைக்க தடயங்கள் அழிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்தது. 

 

சிசிடிவி கார்ட்டிஸ்க் காணவில்லை என்று சொன்னது போல வேறு எதையெல்லாம் காணவில்லை என்பார்களா என்ற வாடிக்கையாளர்களின் கேள்விக்கு விடையில்லை.

  

ப்


இந்த நிலையில் தான் 6 நாட்களுக்கு பிறகு வங்கி முதுநிலை மேலாளர் மாரீஸ் கண்ணன் இன்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  அதில் தங்கள் வங்கியில் 13.75 கிலோ தங்க நகைகள் வாடிக்கையாளர்களிடம் அடமானம் வாங்கிய நகைகளை காணவில்லை. அதன் மதிப்பு ரூ 4.84 கோடி. காணாமல் போன நகைகளை கண்டுபிடித்து தறுமாறு கேட்டிருந்தார்.


நியாயமான விசாரணை நடந்தால் நகை திருட்டில் மாரிமுத்துவுக்கு பின்னனியில் செயல்பட்டவர்களும் பிடிபடுவார்கள்.  இல்லை என்றால் இறந்த மாரிமுத்துவோடு முடிக்கப்படலாம். 


ஆனால் மாரிமுத்து உறவினர்கள் தொடர்ந்து எழுப்பும் கேள்வி.. மாரிமுத்து அலுவக உதவியாளர். லாக்கர் சாவிகள் எப்படி அவரிடம் போயிருக்கும். எதற்காக சிசிடிவி பதிவுகளை அழிக்க வேண்டும். மாரிமுத்து சாவு தற்கொலையாக இருக்க வாய்ப்பு குறைவு.. உண்மைகளை தெரிந்து கொண்டதால் கொன்று கடலில் வீசி இருக்கலாம். அதனால் நல்ல விசாரணை அதிகாரிகள் விசாரித்தால் உண்மை வெளிவரும் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்