Skip to main content

செல்ஃபோன் டவருக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்...!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

Public  cell phone tower ...!


ஈரோடு பெரிய சேமூர் பச்சைப்பாளி மேடு என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியில் தனியார் செல்ஃபோன் நிறுவனத்தின் டவர் அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களாக நடந்து வந்தது. இதையறிந்த, அப்பகுதி மக்கள் செல்ஃபோன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, டவர் அமைக்கும் பணியாளர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

தொடர்ந்து பொதுமக்கள் 'தர்ணா' போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது, "இங்கு பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகிறோம். இங்கு தனியார் செல்ஃபோன் டவர் அமைத்தால் அதில் ஏற்படும் கதிர்வீச்சால்  குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள். மேலும் கால்நடைகளும் பாதிக்கப்படும். எங்கள் பகுதியில் செல்ஃபோன் டவர் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். வழக்கு நிலுவையில் உள்ளபோதே அந்தத் தனியார்  நிறுவனத்தினர் திடீரென டவர் அமைக்க வந்து விட்டார்கள். ஆகவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்." என்றனர்.


இதைத்தொடர்ந்து, போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு வடக்கு போலீசார் மக்களிடமும், செல்ஃபோன் டவர் ஊழியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நீதிமன்றத்தில் பொதுமக்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை எவ்விதப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது என செல்ஃபோன் டவர் நிறுவன ஊழியர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, செல்ஃபோன் டவர் அமைக்கும் பணியை ஊழியர்கள்  கைவிட்டனர். இதன் பிறகே அந்த இடத்தை விட்டுப் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்