Published on 31/03/2018 | Edited on 31/03/2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வந்த தகவலின் பேரில் இன்று காலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை-மெரினாவில் கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்ற நிகழ்வை தவிர்க்க காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை மெரினாவில் போராட்டம் நடத்துவதுபோன்று புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. பின்னர் வீடியோவும் வெளியானது. இந்த புகைப்படங்கள், வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, போராட்டம் நடத்திய அமைப்பு எது, வெளியிட்டவர்கள் யார், எந்த இடம் என்று விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.