![Prohibition petition for melting temple jewelery!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Gd3oqVGbjREl8bNm1C3U_WJjbyO-7_O1sn8S4_iiCC0/1633615319/sites/default/files/inline-images/77777777.jpg)
கடந்த சென்னை ஏழுகிணறு பகுதியில் வள்ளலார் வசித்த இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் சேகர்பாபு ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அமைச்சர் சேகர்பாபு, ''கோவில்களில் காணிக்கையாக வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகள் உருக்கும் பணி வெளிப்படையாக நடைபெறும். ஆகவே இதில் எந்த தவறும் நிகழாது. இறைவனுக்குத் தந்த அந்த பொருட்களை இறைவனுக்கே பயன்படுத்துவதுதான் இந்த திட்டம். மீண்டும் மீண்டும் வற்புறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இதில் இம்மியளவு கூட தவறு நடைபெறுவதற்குத் தமிழ்நாடு முதல்வரும், இந்து சமய அறநிலையத் துறையும் அனுமதிக்காது. ஐயப்பன் மீது சாட்சியாக, ஐயப்பன் மீது சத்தியமிட்டுச் சொல்லுகிறோம் ஒரு சிறு தவறு கூட இந்த நகைகளை உருக்குகின்ற பணியில் நிகழாது... நிகழாது...'' என்றார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில் நகைகளை உருக்குவதற்குத் தடைகேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.