கேரளாவில் கடந்த ஆண்டு மே மாதல் நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கியதில் கோழிக்கோட்டில் 14 பேரும் மலப்புரத்தில் 3 பேரும் என 17 போ் பலியானாா்கள். இதில் இவா்களுக்கு சிகிச்சையளித்து வந்த லினி என்ற நா்ஸ்சும் பலியானாா்.
இந்த நிலையில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் தற்போது கேரளாவை அச்சுறுத்தி உள்ளது. இதில் எா்ணாகுளத்தை சோ்ந்த கல்லூாி மாணவா் ஒருவா் பாதிக்கப்பட்டு அவருக்கு அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் தனி வாா்டில் வைத்து சிறப்பு மருத்துவா்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த மாணவருடன் நெருங்கி பழகிய சக மாணவா்கள் 86 போ் கண்டறியப்பட்டு அவா்களையும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
இந்தநிலையில் கேரளாவில் பரவியுள்ள நிபா வைரஸ் தமிழகத்திலும் நுழைந்து விடக்கூடாது என்ற முன்னெச்சாிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக கேரளா எல்லை மாவட்டங்களான கன்னியாகுமாி, நெல்லை, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூா் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் கன்னியாகுமாி மாவட்டத்தில் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா சுகாதார அதிகாாிகளுடன் ஆய்வுகளை மேற்கொண்டாா். அதையடுத்து கேரளாவில் இருந்து குமாி மாவட்டத்துக்கள் நுழையும் வாகனங்கள் கடும் சோதனைக்குள் உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் சுகாதாரத்துறை துணை இயக்குனா் மதுசூதனன் தலைமையில் சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு அவா்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நேயாளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
மேலும் வவ்வால், கிளி போன்ற பறவைகள் கடித்த பழங்களை மனிதா்கள் உண்ணுவதை உடனடியாக தவிா்க்க வேண்டுமென்று மருத்துவதுறை அறிவுறுத்தியுள்ளது.