ஊரக உள்ளாட்சி தோ்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு குமாி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவு தக்கலை, குருந்தன்கோடு, மேல்புறம், திருவட்டாா், ராஜாக்கமங்கலம் ஆகிய 5 ஊராட்சி ஓன்றியங்களில் நடக்கிறது. இதில் 1989 வேட்பாளா்கள் களத்தில் நிற்கின்றனா்.
![first phase election in kanyakumari](http://image.nakkheeran.in/cdn/farfuture/EIgeJMNvcmN3lGqs5T7tuKqn8U9JV5D1NV0RN3e0If0/1577450027/sites/default/files/inline-images/ftghnjf.jpg)
இதில் 519 கிராம ஊராட்சி வாா்டு க்கு 1389 பேரும், 48 கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 219 பேரும், 61 ஊராட்சி ஓன்றிய வாா்டு உறுப்பினருக்கு 282 பேரும், 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 71பேரும் போட்டியிடுகின்றனா். இவா்களுக்கு 2 லட்சத்து 88 ஆயிரத்து 812 போ் வாக்களிக்க உள்ள நிலையில் வாக்குபதிவு தொடங்கிய காலையில் இருந்தே விறுவிறுப்பான வாக்குபதிவு நடந்து வருகிறது.
குறிப்பாக பெண்கள் ஆா்வத்துடன் வாிசையில் நின்று வாக்களித்தனா். அதே போல் வயதானவா்கள், ஊனமுற்றவா்களை போட்டி போட்டு வேட்பாளா்களின் ஆதரவாளா்கள் வாகனங்களில் அழைத்து சென்றும் கைதூக்கலாக தூக்கி சென்று வாக்களிக்க வைத்தனர்.
சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தோ்தலை போல் அரசியல் கட்சி பிரமுகா்களும் ஓவ்வொரு பகுதிகளில் முகாம் போட்டு கொண்டு வாக்களிக்க செல்லும் வாக்காளா்களிடம் சைகை வாக்கில் சின்னத்தை சொல்லி வந்தார்கள்.