





Published on 13/10/2021 | Edited on 13/10/2021
அஞ்சல் துறை சார்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகப் பள்ளிகள் அளவில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. அதில் பல்வேறு பள்ளிகளிலிருந்து ஓவியங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து சிறந்த இரண்டு ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றைச் சிறப்பு அஞ்சல் உறையாக இன்று வெளியிடப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் இச்சிறப்பு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அஞ்சல் உறையைச் சென்னை மண்டல தபால் துறை இயக்குநர் சோமசுந்தரம் வெளியிட்டார். அதனை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி டீன் ஜெயந்தி பெற்றுக்கொண்டார். இதில் தபால் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
