Skip to main content

தமிழகத்துக்கு குடிநீர் வழங்க கேரள அரசிடம் பேச்சுவார்த்தை!

Published on 23/06/2019 | Edited on 23/06/2019

 

பொன்னேரியில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் மழை வேண்டி அதிமுகவினர் சிவப்பு வர்ண யாக பூஜை நடத்தினர். இதில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

m

 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’அ.தி.மு.க. வினருக்கு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளதால் இந்த வர்ண யாகத்தின் மூலம் மழை வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஏரிகளையும் முறையாக தூர்வாரி பராமரித்து வைத்துள்ளோம். மழைக் காலத்தில் எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் அரசு தயார் நிலையில் இருக்கிறது.

 

ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதேபோல் கேரள மாநிலத்தில் இருந்தும் குடிநீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு சில தினங்களுக்கு மட்டும் அங்கிருந்து குடிநீர் கொண்டு வந்தால் அது வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் தொடர்ந்து தமிழகத்துக்கு குடிநீர் வழங்க கோரி அம்மாநில அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’’என்று தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்