Published on 29/01/2019 | Edited on 29/01/2019

தலைமை செயலக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.
தலைமை செயலக ஊழியர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம் நடத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் தலைமை செயலக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டால் ஊதியம் பிடிக்கப்படும்.அவசர காரணங்களுக்கான விடுப்பின் உண்மை தன்மையை ஆராயப்படும் என எச்சரித்துள்ளார்.