![Polytechnic student electrocution incident; Tragedy near Panruti](http://image.nakkheeran.in/cdn/farfuture/xSiYbjvkSaPRf3MQF0EavrfSZj9jpyOGRJ_Wla4POwc/1701267064/sites/default/files/inline-images/a3501.jpg)
பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமார். கட்டடத் தொழிலாளி. இவரது மகன் ராகுல் என்கிற கிருஷ்ணா (16). இவர் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை காலை கல்லூரிக்கு புறப்படுவதற்காக தனது சட்டையை அயன் பாக்ஸ் மூலம் கிருஷ்ணா அயன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.