Skip to main content

தூய்மை பணியாளரின் நேர்மை; சால்வை அணிவித்து பாராட்டிய காவல்துறை!

Published on 21/01/2025 | Edited on 21/01/2025
Police worker for his honesty by wearing a shawl

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி(30).  இவர் அவரது உறவினர் வீடான காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.  அப்போது, அவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்த  கைப்பையில் தவறவிட்டுள்ளார். அந்த பையில் அரை பவன் தோடு,  கால் பவுன் மோதிரம், செலவுக்கு பணம் வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் நந்தினி தவறவிட்ட பைலால்பேட்டை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பானு என்பவர் கையில் கிடைத்துள்ளது. இதனை உடனடியாக காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து கொடுத்துள்ளார்.

அதேசமயம் பையைத் தவறவிட்ட நந்தினியும் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளார்.  காவல்துறையினர் புகாரைப் பெற்றுக் கொண்டு, தூய்மை பணியாளர் பானுவின் நேர்மையை கௌரவிக்கும் விதமாக காவல் ஆய்வாளர் ஆறுமுகம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  இவருடன் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட காவலர்கள் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்