தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழகக் காவல்துறைக்கு குரூப்-1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் குரூப் 1 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்தது மத்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் தமிழக காவல் துறையில் குரூப் - 1 நிலையில் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2001ஆம் ஆண்டு பேட்ச் 2 பேர், 2002ஆம் ஆண்டு பேட்ச் 9 பேர், 2003ஆம் ஆண்டு பேட்ச் 14, 2005ஆம் ஆண்டு பேட்சில் ஒருவருக்கு என மொத்தம் 26 பேருக்கு ஐ.பி.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது குரூப் - 1 நிலையிலான காவல் அதிகாரிகளாக பணியாற்றி வரும் மணி, செல்வகுமார், சுதாகர், எஸ்.ஆர். செந்தில்குமார், முத்தரசி, பெரோஸ்கான் அப்துல்லா, சக்திவேல், நாகஜோதி, ராஜராஜன், விமலா, சுரேஷ்குமார் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதே போன்று சண்முகப்ரியா, ஜெயக்குமார், ஏ. மயில்வாகன், ஜெயலட்சுமி, சுந்தர வடிவேல், உமையாள், சரவணன், த. செந்தில் குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாகப் பதவி உயர்வு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.