மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (21.01.2025) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. உயர் கல்விக்காக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்களது மகள்களை தமிழகத்திற்குஅனுப்புவதை மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர். பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பற்றதாக நினைக்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக கருதுகின்றனர்.
இங்கு தொடர்ந்து பாதுகாப்பான சூழல் நிலவுவதால் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகள் அதிகளவில் தமிழகத்திற்கு படிக்க வருகின்றனர். பெண்களுக்கு தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தமிழகத்தில் வசிப்பதற்கு இங்குள்ள மக்களின் அன்பும், விருந்தோம்பலுமே காரணம ஆகும். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழக விளங்குகிறது” எனப் பேசினார்.