Skip to main content

தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்! 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

Head teacher suspended

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் திருவிக்ரமன்(52) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருவிக்ரமன் தொட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தலைமையாசிரியர் அடிக்கடி தொட்டுப் பேசுவதாக புகார் எழுந்தது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர்.

 

இத்தகவல் அறிந்த முகையூர் உதவி தொடக்க கல்வி அதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்பித்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி திருவிக்ரமனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்