Skip to main content

“தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த முடியாது!” - செங்கோட்டையன் பேட்டி!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

Temporary teachers cannot be hired on a permanent basis

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கர்பாளையம் வினோபாநகரில் குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதி அமைந்துள்ளது. அங்கு 1.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் 18 -ஆம் தேதி பூமிபூஜையுடன் பணிகளை தொடங்கிவைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விளாங்கோம்பையில் பள்ளிகள் திறப்பில் சிரமம் உள்ளது. வனத்துறை பாதுகாப்போடு பள்ளிகள் தற்போது திறக்கப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அதற்குப் பிறகு பொதுத்தேர்வு நடத்தப்படும். மாணவர்களைத் தங்கள் பிள்ளைகள் போல் நினைத்து ஆசிரியர்கள் கல்வி கற்றுத்தருகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த முடியாது. தமிழகத்தில் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைபாடு இல்லை.

 

நாளை +2 தேர்வில் எத்தனை பேர் தேர்வு எழுதுகின்றனர் என்பது பற்றி அறிவிக்கப்படும். ஒரு அறைக்கு 25 பேர் இருக்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அதிகப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளிக்கு வராத மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் தேர்வு எழுதலாம். எப்போதும் அரசுப் பள்ளிகளில் 98 சதவீதம் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். இடைநிற்றல் என்பதே தமிழகத்தில் இல்லை. மாணவர்கள் சேர்க்கை கூடுதலாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்