திருச்சி விமானநிலையம் புதிதாக விரிவாக்கம் செய்வதற்காக பணிகள் தயார் செய்து கொண்டிருக்கிருக்கும் நிலையில் விமானம் காம்பவுண் சுவற்றை இடித்து சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 1.20 மணியளவில், 130 பயணிகளுடன் துபாய் கிளம்பிய ஏர் இந்தியா விமானம், ஓடுதளத்தில் இருந்து மேலே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து திருச்சி – புதுகை சாலையை ஒட்டிய காம்பவுண்ட் சுவரை உடைத்துக்கொண்டு வானில் எழும்பியது.
விமானம் சென்றுவிட்ட நிலையில், காம்பவுண்ட் சுவர் உடைந்த இடத்தில் விமான நிலைய இயக்குநர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விமானத்தின் சக்கரம் மோதி காம்பவுண்ட் சுவர் உடைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதற்கிடையே, வானில் பறந்த அந்த விமானம் இன்று அதிகாலை 5.46 மணிக்கு அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது சுற்றுசுவரில் விமானம் மோதியதால் விமானத்தின் அடிப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமான நிலைய ஆணைய குழு விசாரித்து வருகிறது.
அதேபோல் மும்பை விமான நிலையத்தில் இறக்கப்பட்ட பயணிகள் துபாய் செல்ல மாற்று விமானத்திற்கு ஏற்பாடு செய்து செய்வது குறித்து அதிகாரிகள் விசாரணை மற்றும் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.