Published on 13/12/2018 | Edited on 13/12/2018
![Petrol price increase](http://image.nakkheeran.in/cdn/farfuture/z4RrZGj1Thtk7HqREQAaTrS6KBw7bTA1s21VDJEspMQ/1544735174/sites/default/files/inline-images/AAA_1.jpg)
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தொடர்ந்து பெட்ரோல் விலை குறைந்து வந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து ரூபாய் 72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் டீசல் விலை மாற்றம் இன்றி லிட்டருக்கு ரூபாய் 68.26 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐந்து மாநில தேர்தலுக்கு பின் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.