Skip to main content

'இயற்கை எரிவாயுவை பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் விலை குறையும்' - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி    

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

'Petrol and diesel prices will come down if natural gas is used' - Union Minister Nitin Gadkari interview

 

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்காக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி  சென்னை வந்துள்ளார்.

 

இன்று (16.02.2021) மதியம் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேடையில் பேசுகையில், ''கழிவு நீரைக்கூட பணமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். நாக்பூரில் கழிவுநீரை மின் உற்பத்திக்காக மஹாராஷ்டிரா அரசுக்கு விற்பனை செய்கிறோம். தோல் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளால் மாசு ஏற்படுத்துகிறது'' என்றார். அதன்பின் வேலூர் வாலாஜாபாத் அருகே உள்ள வி.சி.மோட்டூரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

 

பின்பு செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''சென்னையிலிருந்து பெங்களூருக்கு அதிவிரைவு சாலை உருவாக்கப்படும். அதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பிரதமரும், தமிழக முதல்வரும் பங்குகொள்வார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மக்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. விவாயிகள் ட்ராக்டருக்கு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கலாம். ஃபாஸ்டேக் வாங்க கொடுக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது. இனியும் அவகாசம் நீட்டிக்கப்படாது'' என திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

சேலம் - சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக, இன்று மாலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்