கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் 2 வது உலக தமிழர் கொங்கு பேரவை மாநாட்டிற்கு தடைவிதிக்கக்கோரி போட்டபட்ட பொதுநல வழக்கில், தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்ததோடு வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் செலுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடவிருக்கும் 2 வது உலக தமிழர் கொங்கு பேரவை மாநாட்டால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தை சேர்ந்த சரவணன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மாநாடு தனியார் நிலத்தில் நடைபெற இருப்பதால் எந்தவொரு இடையூறோ, சட்ட ஒழுங்கு பிரச்சனையோ நடைபெறாத வண்ணம் ஏற்பாடு செய்யப்படுள்ளது என வாதிட்டார்.
இந்த வழக்கை கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரனுக்கு எதிரணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனியரசு நடத்தி வரும் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர் என்பதை மறைத்து இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கை பொதுநல வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த சரவணனுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மாநாடு தொடர்பான முழு அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.