Skip to main content

'கவனமாக இருங்கள்' - விஜபிக்கள் பெயரைச் சொல்லி பணம் கேட்கும் நபர் - வெளியான ஆடியோ!

Published on 20/09/2024 | Edited on 20/09/2024
person who asks for money by name of vip

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் மதிமுக செயலாளராகவும், நகராட்சி கவுன்சிலராகவும் இருப்பவர் ஆட்டோ மோகன். அடையாள தெரியாத நபர் இவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு, இரவு செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த நபர், “நான் மதிமுக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் சரவணன்.என் வாகனம் கார் டயர் பெஸ்ட்டாகிவிட்டது நானும் என் மனைவியும் குழந்தையும் குடியாத்தம் பைபாஸ் ரோட்டில்  நின்று கொண்டு உள்ளோம். எனக்குப் பணம் அனுப்புமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியுள்ளார். பின்னர், “துரை வைகோ உங்களிடத்திலே பேச சொல்லட்டுமா? கான்பரன்ஸ் போடட்டுமா..” எனக் கேட்டுள்ளார்.பிறகு வேண்டாம் என்று உங்களுக்கு நான் என்னுடைய நம்பரை அனுப்புகின்றேன். அதற்கு பணம் அனுப்பி வையுங்கள்” கேட்டார்.

இதனைத் தொடர்ந்து உஷ்சாரான ஆட்டோ மோகன் பணம் அனுப்பி வைக்கிறேன் என்று கூறி போனை கட் செய்துவிட்டார். பிறகுதான், ஆட்டோ மோகன் போன்றே குடியாத்தம் பகுதியில் உள்ள நகர மன்ற உறுப்பினர்கள், மற்றகட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலரிடம் அவர்களின் கட்சி தலைவர் பேசுகிறேன் என்று அந்த நபர் பணம் கேட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை ரெக்கார்ட் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஆட்டோ மோகன், இந்த நபரை யாரும் நம்ப வேண்டாம்  என்றும், இந்த நம்பரில் போன் வந்தால் அழைப்பை ஏற்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. 

சார்ந்த செய்திகள்