
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் மடப்பட்டு பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின்னாக பதிலளித்து உள்ளார்.
இதனையடுத்து திருநாவலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அந்த நபர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த தாடி ராஜி என்பதும், இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்த நிலையில் அவர் வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இவருடன் தொடர்பில் இருக்கும் கஞ்சா விற்பனையாளர் குறித்தும், இந்தப் பகுதியில் யார் யாரிடம் கொடுத்து வருகிறார் எனவும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.