
நாமக்கல் பகுதியில் இருந்து லாரி ஒன்று முட்டை ஏற்றிக்கொண்டு சென்னைக்குச் சென்றது. இந்த லாரியை மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். பாண்டியன் லாரியை மதுபோதையில் அதிவேகமாக இயக்க வந்துள்ளதாகக கூறப்படுகிறது. லாரி ஜி.எஸ்.டி சாலையில் வந்துகொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியுள்ளது. மேலும் படுகாயமடைந்த ஓட்டுநர் மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.