![Permission to conduct jallikkattu](http://image.nakkheeran.in/cdn/farfuture/R5_-Ws2L-r6uhWsft58DQo6-lMfdB6lNQL5luDj501s/1641819081/sites/default/files/inline-images/minister-moorthi.jpg)
தமிழத்தில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு கரோனா மூன்றாம் அலையின் பரவல் தீவிரமாக பரவத் துவங்கியதால் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தமிழக அரசின் சார்பில் ஆலோசனை நடைபெற்றது. அதில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகியவற்றில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி என அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறுகையில், “ஒரு ஜல்லிக்கட்டில் 300 வீரர்கள் மட்டுமே அனுமதி. பார்வையாளர்கள் 150 பேர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும். மேலும் நாட்டு மாடுகள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இருதரப்பும் முடிவுக்கு வராததால் மாவட்ட நிர்வாகம் நடத்தும். ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றொரு போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு உள்ளூர் பிரமுகர்கள், வீடுகளுக்கு உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். அந்த ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் அந்தந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே அனுமதி. வீரர்கள் மற்றும் பங்குபெறும் காளைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது”என்று தெரிவித்தார்.