பெரம்பலூர் வெங்கடேஷபுரம் காலனியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரின் மனைவி சுமதி இவர் குன்னம் காவல்நிலையத்தில் 2016- ஆம் ஆண்டு முதல் கான்ஸ்டபிளாகப் பணிப்புரிந்து வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஒரே காவல்நிலையத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பற்றிய பட்டியலை பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகம் தயாரித்திருக்கிறது. இதில் கான்ஸ்டபிள் சுமதி குன்னம் காவல்நிலையில் தான் வேலை செய்த பணி காலத்தை குறைத்து எஸ்.பி அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார்.
இதே போன்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வழக்கின்மை சான்று பெற்றுத்தர லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்திருக்கிறது. இது குறித்து பெரம்பலூர் எஸ்.பி. நிஷா பார்த்திபன் நடத்திய விசாரணையில், குன்னம் காவல்நிலையத்தில் பணி காலத்தை குறைத்து காண்பித்தது தெரிய வந்தது. இதனையடுத்து பொய் தகவல் சொன்ன போலீஸ் கான்ஸ்டபிள் சுமதியை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி உத்தரவிட்டார். இது பெரம்பலூர் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.