Published on 22/12/2020 | Edited on 22/12/2020

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதியதாக உதயமாகி ஓராண்டுக்கு மேலாகியும் புதிதாகத் தொடங்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறியும் அவற்றைச் செய்து கொடுக்க கோரியும், ஸ்கேன் மற்றும் பிரசவம் பார்க்கும் செவிலியர்கள் நோயாளிகளிடம் லஞ்சம் கேட்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.