
எம்ஜிஆருடனும் தான் பயணித்ததாக சசிகலா அவரது அடுத்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய பிறகு அதிமுகவை மீட்டெடுப்பார் எடுப்பார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், சமீபகாலமாக தொண்டர்களுடன் அவர் பேசும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகிவருகிறது.
இந்நிலையில், எம்ஜிஆருடன் சேர்ந்தும் தான் பயணித்ததாக சசிகலா அவரது அடுத்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் பேசிய தொலைபேசி ஆடியோ வெளியாகியிருக்கிறது. அந்த ஆடியோவில், ''எம்ஜிஆருடனும் நான் பயணித்தேன். கட்சி தொடர்பாக எம்ஜிஆர் தன்னிடம் கருத்து கேட்பார். ஆனால் இது ரொம்ப பேருக்கு வெளியே தெரியாது. நிறைய விஷயங்களை அவருடன் பேசும்போது நிறைய கருத்துக்களை எல்லாம் கேட்டிருக்கிறார் கட்சி விஷயமாக. அப்போது கூட நான் ரொம்ப பொறுமையாக சொல்வேன் என்னுடைய கருத்துக்களைப் பொறுமையாக எடுத்துச் சொல்வேன். அப்படியே இருந்து பழகிவிட்டேன். ஜெயலலிதா கோபமாக ஏதாவது முடிவெடுத்தால் நான் உட்கார்ந்து பொறுமையாகப் பேசுவேன்'' என தெரிவித்துள்ளார்.