குடியிறுக்க சொந்த நிலம், வீடு இல்லாமல் லட்சக்கணக்கான குடும்பங்கள் ஊரின் ஒதுக்குப் புறமான பகுதிகளிலும், ஓலைக் குடிசையிலும், நகரங்களில் சாக்கடை கழிவு நீர் ஓடைகள் ஒரத்திலும் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.
இப்படி வீடு இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் 2020க்குள் வீட்டுமனை வழங்கப்படும் என்று அறிவித்த அரசு, அதை செயல்படுத்த குறைந்தபட்ச முனைப்புக் கூட காட்டவில்லை என்ற கண்டனக் குரலோடு ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டு மனை கேட்டு தாலூகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் இலவச வீட்டுமனை கொடுக்கும் அரசாணை 318 ஐ அமல்படுத்த வேண்டும், புறம்போக்கு நிலங்களில் ஐந்தாண்டு குடியிருப்போருக்கு முறைபடுத்தி இலவசவீட்டு மனை பட்டா கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.