Skip to main content

’’அரசு மரியாதையென்பது...’’ -அமைச்சரின் வீடியோவிற்கு பார்த்திபன் பதில்

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

 

ஒருவர் மட்டுமே நடித்து இதுவரை உலகத்தில் 12 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.  அப்படி ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே கொண்டு, ‘’ஒத்த செருப்பு’’ படத்தை இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார் ஆர்.பார்த்திபன்.  நடிப்பு, இயக்கம், தயாரிப்பு எல்லாமே பார்த்திபன் என்பதால் அந்த 12 படங்களை விடவும் இப்படம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.  இப்படம் இம்மாதம் இருபதாம் தேதி திரைக்கு வருகிறது.

p

 

ரஜினிகாந்த், அமீர்கான் உள்ளிட்ட பலரும் இப்படத்தை பாராட்டி வீடியோ பதிவுகள் வந்துள்ள நிலையில்,  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இப்படத்தை பாராட்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அப்பதிவில்,  ‘’உலக சினிமாவில் முதல் முயற்சியாக ஒரே ஒருவர் நடித்து, அதை சகோதரர் பார்த்திபனே இயக்கி, தயாரித்துள்ளார்.  இந்திய அளவில் தமிழ்சினிமாவுக்கு விருதுகள் இல்லை என்ற குறை இருக்கிறது.  இந்த படத்தின் மூலமாக அந்த வெற்றிடம் நிரம்பும். அதற்கான அனைத்து உதவிகளையும் அரசு செய்வதற்கு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்’’என்று கூறியுள்ளார்.

 

இதற்கு பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ‘’அரசு மரியாதையென்பது அதிக கௌரவத்திற்குரியது! நன்றி மாண்பு மிகுந்தவருக்கு!’’என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்