சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் “பெற்றோர்கள்தான் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்; எல்லாமே அரசால் செய்ய முடியாது. ஒவ்வொரு பெண்ணிற்கு தனித்தனியே காவலர்கள் போடமுடியாது. அப்படிச் செய்தால் போலீஸுக்கு அந்த வேலையை பார்ப்பதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிள்ளைகளை கட்டுப்பாடாக வளர்க்க வேண்டும். என்னை என் வீட்டில் கட்டுப்பாட்டோடு வளர்த்துள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.