Skip to main content

சசிகலா குடும்பத்தின் ஆதரவோடு திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயன்!? 

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் பரணி கார்த்திகேயன். புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த இவர் சசிகலா குடும்பத்திற்கு தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். அதேபோல் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் தீவிர ஆதரவாளராக இருந்தார். இன்று அவர் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள நிலையில் அவர் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் ஆசியோடுதான் திமுகவில் இணைந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.

 

dmk

 

ஏற்கனவே இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ரத்தினசபாபதி மூலமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. முதலில் என் தம்பியை அனுப்பி வைக்கிறேன் பிறகு நான் வந்து சேர்ந்து கொள்கிறேன் என்பது போன்று பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் புதிய மாவட்டச் செயலாளர்களை டிடிவிதினகரன் அறிவித்திருந்தார். அறிவிக்கப்பட்டிருந்த கொள்கை பரப்பு செயலாளர்களிலும், அமைப்பு செயலாளர்களிலும் பலர் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்த பட்டியலில் இவருடைய பெயர் வரவில்லை. அதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக திமுகவிற்கு சென்றுவிட வேண்டும் என முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது.

பரணிகார்த்திகேயன் திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் என்பவருடைய சொந்த மருமகன்.  இந்நிலையில் பரணி கார்த்திகேயன்  திமுகவிற்கு சென்றிருப்பது அதுவும் சசிகலா குடும்பத்தின் ஆசியோடு சென்றிருக்கிறார் என்பதுதான் மிகவும் குறிப்பிடத் தகுந்தது.

                                                                                                                                     -மகேஷ் 

 

சார்ந்த செய்திகள்