Skip to main content

ஊராட்சித் தேர்தல்: சிரமங்களிடையே வாக்களித்த பொதுமக்கள்! (படங்கள்)

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

 

தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று (06.10.2021) மற்றும் வரும் 9ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கியது. முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 7,921 மையங்களில் 41,93,996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

 

அதன்படி செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கம் ஊராட்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கோவிலஞ்சேரி, அகரம் தென் ஊராட்சி பகுதியில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதே போல் முடிச்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1,2 மற்றும் 3 ஆம் வார்டு வாக்கு மையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதால் பெண்கள் மிகவும் சிரமத்துடன் வாக்களிக்கச் சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்