Skip to main content

பல்லடம் படுகொலை சம்பவம்; பிடிபட்ட இரண்டாம் நபர் தப்பிக்க முயற்சி

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Palladam incident; A second person caught trying to escape

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலின் அருகே மது அருந்த வந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்களிடம் இங்கு மது அருந்தக் கூடாது என 4 பேரும் தெரிவித்துள்ளனர். இதனால் நடந்த வாக்குவாதத்தில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள், செந்தில்குமார் உள்ளிட்ட தட்டிக் கேட்ட நான்கு பேரையும் வெட்டிப் படுகொலை செய்தனர்.

 

nn

 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஏற்கனவே கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மற்ற இரண்டு பேரையும் உடனடியாக பிடிக்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் மீண்டும் உறவினர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் உடலுக்கும் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. குற்றவாளிகளைக் கைது செய்தால்தான் உடல்களைப் பெறுவோம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லத்தம்பி என்பவரைப் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டுவதற்காகக் காவல்துறையினரை பல்லடம் அருகே உள்ள தொட்டம்பட்டி என்ற இடத்திற்கு அழைத்துச் சென்ற செல்லதுரை, போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். அப்பொழுது செல்லதுரையின் வலது கால் முறிந்தது. அவரை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்