Skip to main content

எல்லைகள் பிரிப்பு! மா.செ.க்களிடம் ஆலோசிக்க எடப்பாடி திட்டம்! 

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
Palaniswami


அதிமுகவில் 51 மா.செ.க்கள் இருக்கின்றனர். இதனை 63 அல்லது 65 ஆக உயர்த்த திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி. இதுகுறித்து எடப்பாடி இல்லத்தில் இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் நேற்று இரவு ஆலோசித்துள்ளனர். அந்த ஆலோசனையில், செயல்படாத சில மா.செ.க்களை மாற்றிவிட்டு தனது ஆதரவாளர்கள் சிலரை நியமிக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ்! இதனை எடப்பாடி ஏற்கவில்லை. 

 

 


தொடர்ந்து நடந்த ஆலோசனையில், மாவட்ட எல்லைகளைப் பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்கி அதிருப்தியாளர்களை அரவணைக்கும் வகையில் புதிய நியமனங்களை செய்யலாம் என முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்பாக மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசிப்பதெனவும் தீர்மானித்துள்ளனர். 
 

அதன்படி, அதிமுகவின்  மா.செ.க்கள் கூட்டத்தை திங்கள்கிழமை கூட்டுவதென முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. அந்த கூட்டத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதற்கு தோதாக மாவட்டத்தின் எல்லைகளைப் பிரிக்கவும் ஒப்புதல் பெறவிருப்பதாக அதிமுக தலைமைக் கழக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், தமிழகத்தை 4 அல்லது 6 மண்டலங்களாகப் பிரித்து மண்டல பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்