திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகனை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான முருகபக்தர்கள் பஸ்கள், கார்கள் போன்ற வாகனங்களிலும். நடைபயணமாகவும் பழனிக்கு வந்து பழனி முருக பெருமானை தரிசித்து விட்டு செல்கிறார்கள். இதில் பெரும்பாலான முருக பக்தர்கள் பஸ்கள் மூலம் வருகிறார்கள்.
இப்படி வரக்கூடிய முருக பக்தர்தர்கள் வெகு தூரத்தில் இருந்து வருவதால் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பறைக்கு சென்று பல முருக பக்தர்கள் பாத்ரூம் போய் வருவதும் வழக்கம் இப்படி முருக பக்தர்களும் பொதுமக்களும் நகராட்சி கட்டண கழிப்பறைக்கு பாத்ரூம் சென்றால் விதிமுறைகளை மீறி தலைக்கு ஐந்து ரூபாய் வீதம் வாங்கி வருகிறார்கள். ஆனால் முறைப்படி நகராட்சி சார்பில் டெண்டர் எடுத்துள்ள ஆளும் கட்சியினர் பாத்ரூம் செல்லும் முருக பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் பாத்ரூம் போக மூன்று ரூபாய்யும்,குளிப்பதற்கு ஐந்து ரூபாயும் வாங்க வேண்டும் என்ற விதிமுறையோடு தான் நகராட்சியில் டெண்டர் எடுத்துள்ளனர்.
ஆனால் அந்த விதிமுறைகளை எல்லாம் ஆளும் கட்சி காண்ட்ராக்டர் காற்றில் பறக்க விட்டு விட்டு சிறுநீர் மற்றும் பாத்ரூம் போக ஐந்து ரூபாயும், குளிப்பதற்க்கு பத்து ரூபாய் வீதம் பொதுமக்களிடமும் முருக பக்தர்களிடமும் கட்டண கழிப்பறை மூலம் தினசரி ஆயிரக்கணக்கில் பகல் கொள்ளை அடித்து வருகிறார்கள் .
இது பற்றி நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டாலும் அங்குள்ள சில அதிகாரிகள் காண்ட்ராக்டர் போடும் எலும்பு துண்டுக்கு ஆசைபட்டு கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் தொடர்ந்து கட்டண கழிப்பறை மூலம் முருகபக்தர்களிடம் பகல் கொள்ளை அடித்து வருகிறார்கள். இதற்கு மாவட்ட கலெக்டர் வினைய் தான் அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த கட்டண கழிப்பறை பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.