Skip to main content

அசல் ஓட்டுனர் உரிமம் வாகன ஓட்டுனர்களை வஞ்சிக்காதே சிஐடியு ஆர்ப்பாட்டம்

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
அசல் ஓட்டுனர் உரிமம்
வாகன ஓட்டுனர்களை வஞ்சிக்காதே
சிஐடியு ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை, செப்.9- அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டுமென வாகன ஓட்டுனர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. என வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, துணைத் தலைவர்கள் ப.சண்முகம், எம்.ஜியாவுதீன், கு.செல்வராஜ், துணைச் செயலாளர்கள் சி.மாரிக்கண்ணு, ப.செல்வராஜ், செ.பிச்சைமுத்து, க.சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் சி. அடைக்கலசாமி நன்றி கூறினார்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்