Skip to main content

இரட்டை இலை சின்னம் போட்ட சேலையை வாக்காள பெண்களுக்கு வழங்கும் ஒபிஎஸ் தம்பி ராஜா! கண்டு கொள்ளாத தேர்தல்அதிகாரிகள்!!

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

 

 

தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டி போடுகிறார்.  துணை முதல்வரின் மகன் தேர்தல் களத்தில் குதித்து இருப்பதை கண்டு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உட்பட சில எம்எல்ஏக்கள் எம்பிக்கள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு  தேர்தல் களத்தில் குதித்து வருகிறார்கள்.  அதோடு ஓபிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் வீடு வீடாகச் சென்று ரவீந்திரநாத்க்கு ஆதரவு திரட்டி வருவதோடு மட்டுமல்லாமல் சேலை வேஷ்டியையும் கொடுத்து வருகிறார்கள்.  அதை எல்லாம் தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

 

o


 இந்த நிலையில்தான் சென்னையில் இருந்து இரட்டை இலை சின்னம்  போட்ட சேலைகள் கம்பத்தில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸில் மூட்டை மூட்டையாக இருந்ததை பொதுமக்கள் கண்டுபிடித்து தேர்தல் அதிகாரியிடம் சொன்னதின் பேரில் அதை பாளையம் தேர்தல் அதிகாரி கைப்பற்றினர். அது போல் மாவட்டத்திலுள்ள போடி, பெரியகுளம், தேனி போன்ற பகுதிகளிலும்   இரட்டை இலை படம் போட்ட சேலையை மக்களுக்கு கொடுப்பதற்காக அனுப்பி வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. 


 அப்படி சென்னையிலிருந்து வந்த சேலையை தற்பொழுது அதிமுகவினர் அங்கங்கே பதுக்கி வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகிறார்கள். அதுபோலதான் ஓபிஎஸ்-சின் உடன்பிறந்த சகோதரரான ஓ.ராஜாவோ ஒன்றய செயலாளரும், காண்ட்ராக்டரூமான அன்னபிரகாசை வைத்து கொண்டுஇரட்டை இலை படம் போட்ட சேலையை பெரியகுளத்தில் உள்ள வாக்காள பெண்களுக்கு பகிரங்கமாகவே கொடுத்து அண்ணன் மகன் ரவீந்திரநாத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போட சொல்லியும் வலியுறுத்தி வருகிறார்.

 

o

  இதை தேர்தல் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.  அந்த அளவுக்கு துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத் தேர்தலில் போட்டி போடுவதால் தேர்தல் அதிகாரிகளும் பெயரளவில் செயல்பட்டு வருகிறார்கள்.  


 இதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் செல் மூலம் தொடர்பு கொண்டு‌ கேட்ட போது  அவருடைய உதவியாளர்,   தற்போது மேடம் மீட்டிங்கில் இருக்கிறார் என்ன விஷயம் என்று சொல்லுங்கள் அதன்பின் பேச சொல்கிறேன் என்று சொன்னதின் பேரில் நாமூம் விஷயத்தை சொல்லி விட்டு தொடர்ந்து செல் மூலம் தொடர்பு கொண்டும்கூட  லயனில் பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு  மாவட்ட தேர்தல் நிர்வாகமே ஓபிஎஸ்சின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகிறது  என்ற பேச்சும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டும் வருகிறது.
 

சார்ந்த செய்திகள்